தேசிய செய்திகள்

14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மந்திரிசபை ஒப்புதல்

நெல், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட 14 வகை பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதன்படி நெல், பருத்தி, மக்காச்சோளம், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, ராகி, உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகளுக்கும், நிலக்கடலை, எள், சோயா உள்ளிட்ட எண்ணெய் வித்துகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 117 ருபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண வகை நெல் குவிண்டாலுக்கு 2,183 ரூபாயில் இருந்து 2,300 ரூபாயாகவும், கிரேடு 'ஏ' வகை நெல் குவிண்டாலுக்கு 2,203 ரூபாயில் இருந்து 2,320 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போல் மக்காச்சோளம் குவிண்டாலுக்கு 135 ரூபாயும், ராகி குவிண்டாலுக்கு 444 ரூபாயும், துவரம்பருப்பு குவிண்டாலுக்கு 550 ரூபாயும், பாசிப்பருப்பு குவிண்டாலுக்கு 124 ரூபாயும், உளுந்து 450 ரூபாயும், நிலக்கடலை 406 ரூபாயும், எள் 632 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 501 ரூபாய் உயர்த்தப்பட்டு, 7,121 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்