புதுடெல்லி,
கொரோனா 2வது அலையின்போது நாடு முழுவதும் ரெம்டெசிவர் மருந்திற்கான தேவை அதிகரித்தது. தற்போது ரெம்டெசிவிர் மருந்தின் உற்பத்தி கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 1 கோடியே 22 லட்சம் மருந்து குப்பிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில், கொரோனாவால் பாதிப்படைந்த ஏராளமான நோயாளிகளுக்கு மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்திருந்தனர். அதன் காரணமாக இம்மருந்தின் தேவை திடிரென அதிகரித்தது. ஆனால், இம்மருந்தின் இருப்பு குறைவாக இருந்த காரணத்தினால், உற்பத்தியை அதிகரிப்பதற்காக 40 புதிய உற்பத்தி மையங்களுக்கு, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு விரைந்து உரிமம் வழங்கியது.
தற்போது வரை 62 ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி மையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இம்மருந்தின் தேவையை விட உற்பத்தி அதிகமாகியுள்ளது. எதிர்வரும் கொரோனா அலையிலிருந்து தற்காத்து கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மருந்துகளை எவ்வாறு பகிர்ந்தளிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.