திருப்பதி,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில், இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு சிறப்பு கட்டண தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 18 ஆயிரத்து 290 பேர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் உண்டியல் காணிக்கையாக மட்டும் ஒரு கோடியே 94 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இலவச தரிசனத்திற்கான அனுமதியை வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.