தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் ஒமிக்ரான் வைரசால் பாதிப்பு அதிகரிப்பு; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தகவல்

கர்நாடகத்தில ஒமிக்ரான் வைரசால் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்தார்.

தினத்தந்தி

பெங்களூரு:

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதித்த நபர்களிடம் பெறப்பட்ட மாதிரியை ஆய்வு நடத்தியதால் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரசான பி.ஏ-2 பாதிப்பு அதிகம் இருக்கிறது. கர்நாடகத்தை பொருத்த வரையில் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை டெல்டா வைரஸ் பாதிப்பும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டு இருந்தது. கடந்த மாதம் (மே) முதல் இந்த மாதம் (ஜூன்) வரை ஒமிக்ரான் பி.ஏ.-2 வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புதிய வைரசின் மாறுபாடுகள் கர்நாடகத்தில் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்