தேசிய செய்திகள்

சுதந்திர தினம்: மேற்கு வங்காள ரெயில்வே நிலையத்தில் மோப்ப நாய் சோதனை

நாட்டின் சுதந்திர தினத்தினை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் ரெயில்வே நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. உளவு துறை எச்சரிக்கையை முன்னிட்டு டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் ரெயில்வே நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பயணிகளின் உடமைகள், லக்கேஜ்கள் உள்ளிட்டவற்றை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

இதற்காக ரெயில்வே நிலையத்தில் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி ரெயில்வே போலீஸ் படை அதிகாரி சஞ்சீவ் சஹா கூறும்போது, எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். பயணிகள் அச்சப்பட வேண்டாம். ஆனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை