தேசிய செய்திகள்

குல்பூஷன் ஜாதவை சந்திக்க தூதருக்கு அனுமதி வழங்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை

குல்பூஷன் ஜாதவை சந்திக்க தூதருக்கு அனுமதி வழங்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உளவு பார்த்ததாக கூறி, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு தூதரக நடவடிக்கை, சர்வதேச அழுத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொண்டு அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டுள்ளது. இந்தியா முறையிட்டதை தொடர்ந்து அவரது தூக்கு தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. குல்பூஷன் ஜாதவ் வழக்கை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், குல்பூஷன் ஜாதவை சந்திப்பதற்கு இந்திய தூதருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்திய வெளியுறவுத்துறை கோரிக்கை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக, தூதரகத்துக்கு குறிப்பு ஒன்றையும் இந்தியா அனுப்பியுள்ளது. அதில், பாகிஸ்தானில் சிறை தண்டனையை நிறைவு செய்த 10 இந்தியர்களை உடனே, இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும், இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்ட 385 மீனவர்கள் உள்பட 390 பேரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கியுள்ளன.

குல்பூஷனை ஜாதவை தவிர, பாகிஸ்தான் சிறையில் உள்ள மேலும் 4 இந்தியர்களான முகம்மது ஜாவீத், அப்துல் ஹக்கீ, முகம்மது இஸ்மாயில், சல்பிகார் அலி ஆகியோரை தூதர் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்