தேசிய செய்திகள்

மீனவர்களிடம் கடுமையான முறையில் நடந்து கொள்ளக் கூடாது- இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்

மீன்வளம் குறித்து இந்தியா - இலங்கை அதிகாரிகள் பங்கேற்ற 5-வது கூட்டுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய மீனவர்களை கையாளும் விதத்தில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் இலங்கையை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், மீனவர்கள் விவகாரத்தை மனிதாபாபிமான முறையில் அணுக வேண்டும் என்றும் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மீன்வளம் குறித்து இந்தியா - இலங்கை அதிகாரிகள் பங்கேற்ற 5-வது கூட்டுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் மீன்வளத்துறை செயலாளர் ஜகிந்திரநாத் தலைமையிலான குழு கலந்து கொண்டது. இதில் இலங்கை தரப்பில் மீன்வளத்துறை மந்திரியின் செயலாளர் ரத்தன்நாயக பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் தமிழக மீனவர்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டன. அப்போது கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களிடம் இலங்கை படை வீரர்கள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு