தேசிய செய்திகள்

தூதரக அதிகாரிகளை துன்புறுத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

தூதரக அதிகாரிகளை துன்புறுத்தியதற்காக, பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாகிஸ்தானில் உள்ள நான்கானா சாஹிப் குருத்வாரா மற்றும் சச்சா சவுதா குருத்வாரா ஆகியவற்றுக்கு இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 21, 22-ந் தேதிகளில் செல்வது வழக்கம்.

இந்த முறை சீக்கிய பக்தர்கள் சென்றபோது அவர்களை சந்திக்க இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. பாகிஸ்தானின் வெளிநாட்டு அமைச்சகம் முன்அனுமதி வழங்கிய பின்னரும் அவர்கள் தடுக்கப்பட்டனர்.

இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் மிகவும் கவலையும், கண்டனமும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய நேர்மையையும் வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மதவிரோதத்தை தூண்டிவிடுதல், வெறுப்பு, மற்றும் பிரிவினைவாதிகளை ஊக்குவித்தல் ஆகிய நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு