தேசிய செய்திகள்

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 60 கோடியை தாண்டியது

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 60 கோடியை தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று 59 கோடியைக் கடந்தது. மொத்தம் 65,52,748 முகாம்களில் 59,55,04,593 தடுப்பூசிகள் போடப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் இன்று 60 கோடி என்ற எண்ணிக்கையை கடந்ததாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், இந்தியா நிர்வாகம்: 85 நாட்களில் 10 கோடி டோஸ், 45 நாட்களில் 20 கோடி டோஸ், 29 நாட்களில் 30 கோடி டோஸ், 24 நாட்களில் 40 கோடி, 20 நாட்களில் 50 கோடி. இப்போது, 60 கோடி தடுப்பூசியை முடிக்க 19 நாட்கள் ஆனது என்று மாண்டவியா பதிவிட்டுள்ளார்.

நம் நாட்டில் இதுவரை மொத்தம் 3,17,54,281 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 34,169 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விகிதம் 97.67சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து 59 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,22,327 ஆக உள்ளது இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 0.99 சதவீதம் மட்டுமே ஆகும். வாராந்திர தொற்று உறுதி விகிதம் 1.92 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.10 சதவீதமாகவும் இன்று பதிவாகி உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்