தேசிய செய்திகள்

இந்தியா-சைப்ரஸ் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து

பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒரு கூட்டுப் பணிக் குழுவை அமைப்பது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

புதுடெல்லி,

சைப்ரஸ் நாட்டின் அதிபர் கிறிஸ்டோடோலிடிஸ், பிரதமர் மோடி பேச்சு வார்த்தையை தொடர்ந்து இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. புத்தாக்கம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் ஆழமான ஒத்துழைப்பை வழங்குவதற்காக இரு தரப்பினரும் 6 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.

பயங்கரவாத எதிர்ப்புக்கான ஒரு கூட்டுப் பணிக் குழுவை அமைப்பது குறித்த ஒப்பந்தமும் இதில் அடங்கும். மேலும், இடம் பெயர்வு மற்றும் இயக்கம் குறித்த ஒரு விரிவான கூட்டாண்மையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரவும் ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து இருதரப்பும் இணைந்து 5 ஆண்டு கால பாதுகாப்பு ஒத்தழைப் புக்கான திட்ட வரைவை வெளியிட்டன.