புதுடெல்லி,
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் பிரச்சனை நிலவி வரும் நிலையில், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தான் எல்லையில் பிரச்சனை செய்ய திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த அந்நாட்டு தூதரக அதிகாரிகள் 2 பேர், 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு உத்ததரவிட்டுள்ளது.
அவர்கள் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்த அபீத் ஹூசைன் மற்றும் தாஹிர்கான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அவர்களை ரகசியமாக கண்காணித்தனர்.
இதனைத்தொடர்ந்து நேற்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. .அமைப்பிற்காக உளவு பார்த்தாக தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் 24 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பாகிஸ்தான் உயர் கமிஷனுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.