தேசிய செய்திகள்

இந்தியாவிலிருந்து நடப்பாண்டில் 9,670 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி - மத்திய அரசு தகவல்

இந்தியாவிலிருந்து நடப்பாண்டில் 9,670 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியின் மொத்த அளவுகள் குறித்தும் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது? அதனால் ஈட்டப்பட்ட வருவாய் குறித்தும் மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமா கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி அனுப்பிரியா பட்டேல் பதில் அளித்து கூறுகையில், ஈரான், சவுதி அரேபியா, ஈராக், ஓமன், அமெரிக்கா, குவைத், இங்கிலாந்து, கத்தார், கன்னடா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 21 நாடுகளுக்கு 2021-22 நிதி ஆண்டில், 3,537.49 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாஸ்மதி அரிசி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் வங்கதேசம், சீனா, நேபால், வியட்நாம், இலங்கை, சோமாலியா, மலேசியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 23-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத 6,133.63 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அரிசி வகைகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்