தேசிய செய்திகள்

டிரம்ப் சந்திப்பின்போது ஐ டி துறை பிரச்சினைகளை மோடி பேச வேண்டும்: வர்த்தக அமைப்பு கோரிக்கை

பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவுள்ளார். அப்போது அதிபர் டிரம்பை சந்திக்கவுள்ளார். அச்சமயம் ஐ டி துறை அமெரிக்காவில் சந்திக்கும் பிரச்சினைகளை டிரம்பிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று கோரியுள்ளது அஸோசம் வர்த்தக அமைப்பு.

தினத்தந்தி

கொல்கத்தோ

இந்திய ஐ டி நிறுவனங்கள் விசா உரிமையை தவறாக பயன்படுத்தி அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகளை தட்டிப்பறிப்பதாக அதிபர் டிரம்ப் கருதி விசா கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஏராளமான வேலை வாய்ப்பு இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து இந்திய வர்த்தக அமைப்பான அஸோசம் பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் கால் பதித்திருந்தாலும், அமெரிக்க நிறுவனங்களான ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள் கோக் போன்றவை இந்தியாவில் பெரிய சந்தையை வைத்துள்ளன. அவை பெரும் லாபத்தை ஈட்டு அமெரிக்காவிற்குத்தான் அனுப்பி வைக்கின்றன. அமெரிக்காவில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் அங்கு வேலை வாய்ப்பை உருவாக்குகின்றன. உலகளவில் உருவாக்கப்படும் மென்பொருள் அமெரிக்க நிறுவனங்களின் தளங்களிலேயே செய்யப்படுகின்றன. இதை மோடி டிரம்பிடம் சுட்டிக்காட்ட வேண்டும் என்றுள்ளது.

மேலும் அதன் பொதுச் செயலர் ராவத் கூறுகையில் கோக் போன்ற பிரபல பிராண்டுகளுக்கு இந்தியாவில் ஏராளமான விற்பனை வாய்ப்புகள் உள்ளன. இதை எந்த அரசியல் தலைவரும் காழ்ப்புணர்ச்சியுடன் அணுகுவதில்லை. இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்தகைய நிலையில் இந்திய நிறுவனங்கள் தங்களை தற்காத்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்றார் அவர்.

இந்தியாவில் ஏராளமான அமெரிக்க நிறுவனங்கள் பல நகரங்களில் தங்கள் பணியை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா தனது வர்த்தகத்தில் கடுமையான துண்டு விழுவதையும் தாங்கிக் கொண்டு இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடு ஏதும் விதிக்காமல் இருக்கிறது. எனவே பிரதமர் மோடி இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லி விசா கட்டுப்பாடுகள் நீங்க வழி செய்ய வேண்டும் என அஸோசம் கோரிக்கை விடுத்துள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை