கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

கோவேக்ஸ் திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசி

கோவேக்ஸ் என்ற உலகளாவிய திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ்கள் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் கூறுகையில் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு விரைவில் 75 லட்சம் டோஸ் மாடர்னா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

ஆனால் இந்த தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என தெரிகிறது. இதன்காரணமாக இந்த தடுப்பூசிகள் எப்போது இந்தியாவுக்கு வந்து சேரும் என தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு கடந்த மாதம் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தடுப்பூசி இந்தியாவில் கிடைப்பது பற்றி நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் சமீபத்தில் கூறுகையில், இந்த தடுப்பூசிகளை எவ்வாறு இறக்குமதி செய்வது, நாட்டில் கிடைக்கச்செய்வது என்பது பற்றி மாடர்னா நிறுவனத்துடன் அரசு பேசி வருகிறது என குறிப்பிட்டார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்