தேசிய செய்திகள்

சர்வதேச நாடுகளுக்கு 2.29 கோடி தடுப்பு மருந்துகளை வழங்கிய இந்தியா

இந்தியா சர்வதேச நாடுகளுக்கு இதுவரை 2.29 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்கியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியா சர்வதேச நாடுகள் பலவற்றுக்கும் இதுவரை 2.29 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்கியுள்ளது என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறும்பொழுது, இதுவரை மொத்தம் 2.29 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை சர்வதேச சமூகத்திற்கு நாம் வழங்கியுள்ளோம்.

இவற்றில் 64.7 லட்சம் மருந்துகள் மானிய அடிப்படையிலும், 165 லட்சம் மருந்துகள் வர்த்தக அடிப்படையிலும் வழங்கப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

வருகின்ற நாட்களில் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் தீவு நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட கூடும் என அவர் கூறியுள்ளார். உள்நாட்டு உற்பத்தி மற்றும் தேசிய தடுப்பு மருந்து திட்டத்திற்கான தேவை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வினியோகம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது