தேசிய செய்திகள்

பிற நாடுகளுடன் ஒப்பிடும் போதும் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவு: ஹர்ஷ்வர்தன்

பிற நாடுகளுடன் ஒப்பிடும் போதும் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

புதுடெல்லி,

உலக அளவில் இந்தியாவில் தான் கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 29 லட்சத்து 75 ஆயிரத்து 702 பேர் குணமடந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடந்தோர் விகிதம் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளை ஒப்பிடும் போது இது மிகச்சிறந்த ஒன்று. கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதமும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.87 சதவிகிதமாக உள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோர் விகிதம் 75 சதவிகிதமாக உள்ளது. நாடு முழுவதிலும் 1,500 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. அதேபோல், ஒரு நாளைக்கு 10 லட்சம் சளி மாதிரிகள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற இலக்கையும் நாம் எட்டியுள்ளோம்.

கொரோனாவுக்கு எதிரான 3 தடுப்பு மருந்து பரிசோதனையில் உள்ளன. இவற்றில் ஒரு தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் திறன் மிக்க தடுப்பூசியை உலகுக்கு நம்மால் அளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு