தேசிய செய்திகள்

இந்தியாவில் குறைந்த அளவிலேயே தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

தடுப்பூசி எண்ணிக்கையை கணக்கு பண்ணாமல் எத்தனை பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் கவனம் செலுத்துங்கள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முக்கிய விசயம் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

சரியாக எத்தனை தடுப்பூசிகள் போட்டுள்ளோம் என கணக்கு பண்ணுவதில் ஆர்வம் செலுத்துவது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு பதிலாக, மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் இதுவரை குறைந்த அளவிலான மக்கள் தொகையினருக்கே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என்றும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டு உள்ளார். சரியான கொள்கை வடிவம் இருப்பின், இன்னும் சிறப்புடனும், விரைவாகவும் செயல்பட முடியும் என்பது நிச்சயம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றும் அவர் மத்திய அரசிடம் கேட்டு கொண்டுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு