தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியா-நேபாளம் கூட்டு ராணுவ பயிற்சி

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியா-நேபாளம் கூட்டு ராணுவ பயிற்சி நேற்று தொடங்கியது.

புதுடெல்லி,

இந்தியா மற்றும் நேபாள நாட்டின் ராணுவம் கூட்டாக 15 நாட்கள் போர்ப் பயிற்சி பெறுகின்றன. இந்த பயிற்சி உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகரில் நேற்று தொடங்கி உள்ளது. இதையொட்டி கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றன. அக்டோபர் 3-ந்தேதி வரை பயிற்சி நடக்கிறது. இந்த போர்ப்பயிற்சிக்கு சூர்யகிரண் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை இந்த போர் பயிற்சிக்காக உத்தரகாண்ட் வந்திறங்கிய நேபாள ராணுவ குழுவினருக்கு இந்திய ராணுவ அணிவகுப்பு நடத்தி வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது இந்தியாவும், நேபாளமும் இணைந்து பங்குபெறும் 15-வது பயிற்சியாகும். இரு நாட்டு ராணுவ தடைப்படை குழுக்கள், தங்கள் பயங்கரவாத தடுப்பு யுத்திகள் மற்றும் பேரிடர் மீட்பு உத்திகள் பற்றிய பயிற்சிகளை பங்கிட்டு கொள்வதுடன், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றன என்று கூறப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு