தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் 682 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 891 ஆக அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் என வகைகளில் பரவி வந்தது. தற்போது கொரோனா மேலும் உருமாறி ஒமைக்ரான் என்ற பெயரில் உலகை அச்சுறுத்தி வருகிறது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. தற்போது, இந்தியாவிலும் இந்த ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 682 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 8.31 சதவிகிதம் அதிகம் ஆகும்.

இதனால், இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 891 ஆக அதிகரித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு