தேசிய செய்திகள்

பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் - ஜனாதிபதி திரவுபதி முர்மு பெருமிதம்

நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.

Gokul Raj B

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. வரும் ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று உரையாற்றினார். முன்னதாக மராட்டிய மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவாரின் மறைவுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது;-

“நாட்டில் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதே அரசின் நோக்கம். அருணாசல பிரதேசம், திரிபுரா, மிசோரம் மாநில தலைநகரங்கள் அகல ரெயில் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

மின் வாகன உற்பத்தியில் இந்தியா புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அசாமில் செமிகண்டக்டர் ஆலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விண்வெளி சுற்றுலா வெகு தூரத்தில் இல்லை.

நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்தியாவில் பொருளாதாரம் வலுவாக உள்ளது. உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.

மெட்ரோ கட்டமைப்பில் 3-வது பெரிய நாடாக இந்தியா மாறி இருக்கிறது. தமிழகத்தில் புதிய பாம்பன் பாலம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 350 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் உள்ள கிராமங்கள் நெடுஞ்சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சமூக பாதுகாப்பு திட்டங்கள் 25 கோடி குடிமக்களை மட்டுமே சென்றடைந்தன. அரசாங்கத்தின் முயற்சிகளால் தற்போது சுமார் 95 கோடி இந்தியர்கள் சமூக பாதுகாப்புத் திட்டங்களால் பயன் பெறுகின்றனர்.

25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஜல்ஜீவன் மிஷன் திட்டம் மூலம் 12.5 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி வரும் ஆண்டுகளில் 4 கோடி கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும். ”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி