கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இந்தியாவில் நேற்றை விட 19.99 சதவீதம் உயர்ந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வந்தது. இதன்படி நேற்று முன் தினம் 14,313 பேருக்கும், நேற்று 15,823 பேருக்கும் வைரஸ் பாதிப்புகள் பதிவான நிலையில், இன்று 19.99 சதவீதம் உயர்ந்து புதிதாக 18,987 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 987 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 11,079 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,40,20,730 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 246 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,51,435 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19,808 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,33,62,709 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 2,06,586 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 96,82,20,997 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,66,347 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 13,01,083 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 58,76,64,525 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு