தேசிய செய்திகள்

காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரித்தது

காஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரித்தது. #Kashmir #India #UN

தினத்தந்தி

புதுடெல்லி,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறப்படுகிறது, இதுதொடர்பாக சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. அறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. "வெளிப்படையான பாரபட்சம்" மற்றும் "தவறான கதை" உருவாக்கும் முயற்சி என்று இந்திய வெளியுறவுத்துறை கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து உள்ளது.

ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது. ஐ.நா.வின் அறிக்கை ஏமாற்றும் செயல், முரண்பாடானது மற்றும் நோக்கம் கொண்டது. இதுபோன்ற அறிக்கைக்கான நோக்கம் என்னவென்று கேள்வியை எழுப்புகிறோம், என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

ஐ.நா.வின் அறிக்கை இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவது. ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் இந்தியப்பகுதியை சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்து உள்ளது, என இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. பெரும்பாலும் சரிபார்க்கப்படாத தகவல்கள் தொகுப்பை கொண்டு திட்டமிடப்பட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது எனவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்து உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு