கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிவு: புதிதாக 10,229 பேருக்கு தொற்று..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 229 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் சரிவு காணப்படுகிறது. நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 850 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 271 ஆக சரிந்தது (இதில் கேரள மாநிலத்தில் மட்டுமே 6,468 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது).

இந்நிலையில் இந்தியாவில் இன்று மேலும் 10 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 229 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,44,47,536 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 125 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,63,655 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.35 % ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,926 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,49,785 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 98.26 % ஆக உள்ளது.

மேலும் கடந்த 17 மாதங்களில் குறைவான பதிவாக கொரோனா தொற்றுக்கு தற்போது 1,34,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,12,34,30,478 பேக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,20,119 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்