தேசிய செய்திகள்

இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 2,401 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நமது நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் சற்றே குறைந்து வருகிறது. நேற்று புதிதாக 2,430 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இன்று சற்று குறைந்து 2,401 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,46,28,828 ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி 2,373 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்தோர் எண்ணிக்கை 28ஆயிரத்து 991 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 4,40,73,308 ஐ தொட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். இதனால் நாடு முழுவது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,28,895 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 26,625 ஐ எட்டியது, இது மொத்த எண்ணிக்கையில் 0.06 சதவீதமாகும்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்