தேசிய செய்திகள்

2-வது நாளாக கொரோனா பாதிப்பு உயர்வு: ஒரு நாளில் 2.86 லட்சம் பேருக்கு வைரஸ் உறுதி

இந்தியாவில் ஒரு நாளில் 2,86,384 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த நிலையில் நேற்று சின்னதாய் ஒரு மாற்றம் ஏற்பட்டது. தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்குள் அடங்கினாலும் (2 லட்சத்து 55 ஆயிரத்து 874 பேர்) நேற்று பாதிப்பு அதிகரித்தது.

இன்று காலை 8 மணி நிலரப்படி, இந்தியாவில் ஒரே நாளில் 2,86,384 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று 2,85,914 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 2,86,384 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,00,85,116 லிருந்து 4,03,71,500 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 3,06,357 பேர் கொரோனா பாதிப்பில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,73,70,971 லிருந்து 3.76,77,328 ஆக உயர்ந்துள்ளது

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,02,472 ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 573 பேர் இறந்தனர். இதனால் இதுவரை கொரோனாவால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 700 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் இதுவரை 163.84 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 22,35,267 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் காலை வெளியிட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்