தேசிய செய்திகள்

இந்தியாவில் 81 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 58 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கிறது. தினமும் 1 லட்சத்துக்கு குறைவாகவே தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. நேற்று 60 ஆயிரத்து 753 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்திருப்பது உறுதியானது.

இந்நிலியில், இந்தியாவில் 81 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 58 ஆயிரத்து 419 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 98 லட்சத்து 81 ஆயிரத்து 965 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 1,576 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,86,713 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 87 ஆயிரத்து 619 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 87 லட்சத்து 66 ஆயிரத்து 009 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 95.26 சதவீதமாக உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 7,29,243 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 27 கோடியே 66 லட்சத்து 93 ஆயிரத்து 572 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை