தேசிய செய்திகள்

வங்கிக்கடன் மோசடி குற்றவாளி நிரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்திடம் கோரிக்கை: மத்திய அரசு கடிதம் அனுப்பியது

வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளி நிரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்து மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். அவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே அவரை கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு முறைப்படி கேட்டுக்கொண்டு உள்ளது. இந்த தகவலை வெளியுறவு இணை மந்திரி வி.கே.சிங் நேற்று மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார்.

நிரவ் மோடியை ஒப்படைப்பதற்கான சிறப்பு கடிதத்தை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைத்துள்ள மத்திய அரசு, அதை இங்கிலாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு தூதரக அதிகாரிகளிடம் அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்