கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 31,222 பேருக்கு தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31 ஆயிரத்து 222 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியநிலையில், நேற்றுமுதல் சற்று குறைய தொடங்கி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31 ஆயிரத்து 222 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும் 19,688 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,30,58,843 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,41,042 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 42,942 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,22,24,937 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.42 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,92,864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 69,90,62,776 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,13,53,571 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15,26,056 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 53,31,89,348 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை