தேசிய செய்திகள்

வெனிசுலா அதிபரை டிரம்ப் கடத்தியதுபோல் மசூத் அசாரை இந்தியா கொண்டு வரவேண்டும்; ஒவைசி யோசனை

மசூத் அசாரோ அல்லது லஷ்கர் இ தொய்பாவின் இரக்கமற்ற பயங்கரவாதிகளோ யாராக இருந்தாலும் பிரதமர் மோடி கொண்டு வர வேண்டும் என்று ஓவைசி கூறியுள்ளார்.

ஐதராபாத்

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி. பிரதமர் மோடிக்கு ஒரு யோசனை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வெனிசுலாவுக்கு படைகளை அனுப்பி அந்நாட்டு அதிபரை கைது செய்து அமெரிக்காவுக்கு கொண்டு வந்துள்ளார்.

அதுபோல், பிரதமர் மோடி பாகிஸ்தான் சென்று, கடந்த 2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய சதிகாரர்களை பிடித்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும். டிரம்பால் முடியும் என்னும்போது, பிரதமர் மோடியாலும் முடியும். மசூத் அசாரோ அல்லது லஷ்கர் இ தொய்பாவின் இரக்கமற்ற பயங்கரவாதிகளோ யாராக இருந்தாலும் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...