தேசிய செய்திகள்

சீனாவுடன் வலிமையான வர்த்தக உறவு; நிதி ஆயோக் செயல் தலைவர் பரபரப்பு பேச்சு

சீன பொருளாதாரத்தை நாம் தவிர்க்க முடியாது என்று அவர் தெரிவித்தார்

தினத்தந்தி

டெல்லி,

மத்திய திட்டக்குழு , நிதி ஆயோக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் செயல் தலைவராக சுப்பிரமணியம் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிதி ஆயோக் செயல் தலைவர் சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

ஜிஎஸ்டி சீர்திருத்தம் 2.0 ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளிக்கு முன்பு மற்றொரு முக்கிய சீர்திருத்தம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவின் 6வது வர்த்தக நாடாக வங்காளதேசமும், 10வது நாடாக நேபாளமும் உள்ளன. அண்டை நாடுகளுடன் வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும்.

அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக நாடுகளாக மெக்சிகோ, கனடா உள்ளன. அண்டை நாடுகளுடன் சிறந்த வர்த்தக ஒப்பந்தம் இல்லையென்றால் அது உங்களுக்கு பலன் அளிக்காது. ஆசிய நாடுகளுக்கு கவனம் செலுத்த வேண்டும். சீனாவுக்கு அதிக பொருட்களை ஏற்றுமதி செய்யவில்லையென்றால் அது பயனற்றதாகிவிடும். ஏனென்றால் சீனா 18 டிரில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரம். அந்த பொருளாதாரத்தை நாம் தவிர்க்க முடியாது. நீங்கள் போட்டியிட்டு பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும். சிறந்த நாடுகள் சீனாவுடன் அதிக ஏற்றுமதி செய்கின்றன. சீனாவுடன் இந்தியா வலிமையான வர்த்தக உறவு வைத்திருக்க வேண்டும்

என்றார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து