தேசிய செய்திகள்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹெலினா, துருவஸ்திரா ஏவுகணைகள் சோதனை

எதிரிகளின் டாங்கிகளை தகர்க்கும் ஹெலினா, துருவஸ்திரா ஏவுகணைகள் சோதனை நேற்று நடைபெற்றது.

தினத்தந்தி

புதுடெல்லி,

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) முற்றிலும் உள்நாட்டிலேயே ஹெலினா, துருவஸ்திரா என்ற 2 அதிநவீன ஏவுகணைகளை தயாரித்துள்ளது. இவை எதிரிகளின் டாங்கிகளை தகர்க்கக்கூடியவை. எந்த நேரத்திலும், எந்த வானிலையிலும் செயல்படக்கூடியவை.

ராணுவத்தின் பயன்பாட்டுக்கான ஹெலினா, விமானப்படையின் பயன்பாட்டுக்கான துருவஸ்திரா ஏவுகணைகளின் சோதனை நேற்று ஒரு பாலைவன பகுதியில் நடைபெற்றது.

அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டரில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. குறுகிய தூர இலக்கு, நீண்ட தூர இலக்கு, நிலையான இலக்கு, சுழன்று கொண்டிருக்கும் இலக்கு என எல்லா வகையிலும் ஏவுகணைகள் சோதித்து பார்க்கப்பட்டன.

ஆயுதங்கள் பொருத்தி, கைவிடப்பட்ட டாங்கிகள் மீது ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்