Image Courtesy: PTI 
தேசிய செய்திகள்

இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை பரிசோதனை வெற்றி..!

அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த 'அக்னி5' ஏவுகணைகள் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து இன்று 'அக்னி5' ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.

இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், குறிப்பிட்ட இலக்கை 'அக்னி5' ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சலபிரதேச எல்லையில் சீன படையினருடன் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் ஏவுகணை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்