தேசிய செய்திகள்

2-ம் டோஸ் தடுப்பூசி: டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவிடம் 257 கோடி தடுப்பூசிகள் இருக்கும் - ஜே.பி.நட்டா

மக்களுக்கு 2-ம் டோஸ் தடுப்பூசி போடுவதற்காக, டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவிடம் 257 கோடி தடுப்பூசிகள் இருக்கும் என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா மருத்துவமனையின் தடுப்பூசி மையத்துக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று வருகை தந்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், உலகிலேயே மிகப்பெரிய, வேகமான தடுப்பூசி திட்டம் இந்தியாவில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் 9 மாதத்துக்குள் 2 தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தோம். எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்தவும் தடைகளை உருவாக்கவும் முயன்ற போதிலும், மோடியின் அழைப்பை ஏற்று 130 கோடி மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர்.

அவர்களுக்கு முழு வேகத்தில் 2 டோஸ் தடுப்பூசி போடுவதற்காக, வருகிற டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவின் கைவசம் 257 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருக்கும். தடுப்பூசியை பரிசோதிக்க நாங்கள் என்ன எலிகளா என்று கேட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூட தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள் என்று ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை