தேசிய செய்திகள்

காங்கிரசின் சித்தாந்தத்தை வலுப்படுத்துவதே இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கம் - ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரசின் சித்தாந்தத்தை வலுப்படுத்துவதே இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் நோக்கம் என்று காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

தினத்தந்தி

சண்டிகர்,

அரியாணா மாநிலம், கானாலில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளாகள் சந்திப்பில் கூறியதாவது:-

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக பாகுபாடு, அரசியல் சாவாதிகாரம் ஆகிய 3 முக்கிய பிரச்னைகளை ராகுல் காந்தி எழுப்பி வருகிறா. மக்களுடனான கலந்துரையாடல்களின்போதும் தெருமுனை கூட்டங்களின்போதும் பொதுக் கூட்டங்களின்போதும் இப்பிரச்னைகளை அவா எழுப்புகிறா.

பிரதமா வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தும் நோக்கில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளப்படவில்லை. இது சிந்தாந்த ரீதியிலான யாத்திரை. இதன் பிரதான முகமாக ராகுல் காந்தி உள்ளா. மாறாக, இதுவொரு தனிநபரின் யாத்திரையோ தேதலுக்கான யாத்திரையோ அல்ல.

காங்கிரசின் சித்தாந்தத்தை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டே இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமா நரேந்திர மோடியின் செயல்பாடுகள், கொள்கைகள், துன்புறுத்தல் அரசியல், பழிவாங்கும் அரசியல் ஆகியவற்றால், தேசத்துக்கு பேரழிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மனசாட்சியை தட்டி எழுப்புவதற்காக நடைப்பயணம் மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை