சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் நடைபெற்ற ‘தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மாபெரும் பேரணி’(மஸ்தூர் கிஸான் மகா ரேலி) நிகழ்வில் காங்கிரஸ் எம்.பி.யும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது;-
“இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம், விவசாயத்துறை தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக சுமார் 4 மாதங்களாக முடங்கி கிடந்தது. ஆனால், 4 மாதங்களாக பிரதமரால் செய்ய முடியாத பணி, 15 நிமிடங்களில் செய்து முடிக்கப்பட்டது எப்படி? வர்த்தக ஒப்பந்தம் திடீரென மேற்கொள்ளப்பட்டது ஏன்?
ஒவ்வொரு ஆண்டும் இந்தியா ரூ.9 லட்சம் கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களை வாங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்துள்ளார். இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகளை அழித்துவிடும்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.