தேசிய செய்திகள்

இந்தியா இந்த வருடத்திற்குள் தொழுநோய் இல்லாத நாடாகி விடும்; மத்திய மந்திரி ஜே.பி. நட்டா

இந்தியா இந்த வருடத்திற்குள் தொழுநோய் இல்லாத நாடாகி விடும் என மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி. நட்டா இன்று கூறியுள்ளார்.

தினத்தந்தி

பல்லியா,

உத்தர பிரதேசத்தில் மருத்துவமனை தொடக்க நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி. நட்டா இன்று கலந்து கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, இந்தியாவில் இருந்து இவ்வருடத்திற்குள் தொழுநோய் ஒழிக்கப்பட்டு விடும். அடுத்த ஆண்டிற்குள் கலா ஆசார் (கருப்பு காய்ச்சல்) இல்லாத நாடாகி விடும் என கூறினார்.

அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்து பேசும்பொழுது, இந்தியாவில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. குழந்தைகளுக்கு வரும் டெட்டனஸ் மற்றும் வேறு சில நோய்களும் கட்டுக்குள் உள்ளன என உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை குறிப்பிட்டு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்