காத்மாண்டு,
மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நேபாளம் சென்றுள்ள இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத், இன்று அந்நாட்டு ஜனாதிபதி பித்ய தேவி பண்டாரி மற்றும் பிரதமர் ஷேர் பகதூர் டியூபா அகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, நேபாளம்- இந்தியா இடையேயான இரு தரப்பு உறவுகளை ஊக்கப்படுத்துவது ராணுவ உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக நேற்று, ராணுவ தளபதி பிபின் ராவத் நேபாள ராணுவ தளபதி ராஜேந்திர சேத்ரியை சந்தித்து உரையாடினார். நேற்று கொண்டாடப்பட்ட நேபாள ராணுவ தினத்தில் சிறப்பு விருந்தினராகவும் பிபின் ராவத் கலந்து கொண்டார்.