தேசிய செய்திகள்

பாகிஸ்தான் ராணுவத்தின் 5 நிலைகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது

எல்லைக்கு அப்பால் இருந்து அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் ராணுவத்தின் 5 நிலைகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்துள்ளது.

ஜம்மு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நேற்று இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளையும், தீவிரவாத முகாம்களையும் அழித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கோடு, எல்லைக்கு அப்பால் இருந்து நேற்று மாலை 5.30 மணி தொடங்கி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

அக்னூர், நவ்சேரா, கிருஷ்ணா ஃகாட்டி, உரி, பூஞ்ச், ரஜோரி ((Akhnoor, Nowshera, Krishna Ghati ) ஆகிய 15 இடங்களை குறிவைத்து, சிறிய ரக பீரங்கிகள், சிறு ஏவுகணைகளை வைத்து அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையில் உள்ள கிராம மக்களின் வீடுகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் காயம் அடைந்தனர். அதில் இரண்டு பேர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும், அவர்களது 5 நிலைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் ராணுவத்துக்கு உயிர் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் அத்துமீறல் காரணமாக ஜம்முவில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு