தேசிய செய்திகள்

காஷ்மீரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது; விமானி மரணம்

காஷ்மீரில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் காயமடைந்த விமானி ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா நகரில் லக்கன்பூர் பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்றிரவு 7.15 மணியளவில் திடீரென விபத்திற்குள்ளானது.

அந்த ஹெலிகாப்டரில் 2 விமானிகள் இருந்தனர். விபத்தில் காயமடைந்த அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என கத்துவா நகர துணை ஆணையாளர் ஓ.பி. பகத் கூறியுள்ளார்.

எனினும், அதில் சிகிச்சை பலனின்றி விமானி ஒருவர் உயிரிழந்து உள்ளார் என பாதுகாப்பு துறையின் பி.ஆர்.ஓ. கூறியுள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...