புல்பாரி,
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கெண்டாட்டம் களை கட்டியுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மக்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையே புத்தாடை உடுத்தி, இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை நாட்டு மக்கள் கொண்டாடி வரும் நிலையில், எல்லையில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய - வங்கதேச எல்லையான புல்பாரியில் தீபாவளி கொண்டாடப்பட்டது. வங்கதேச வீரர்களும், இந்திய வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பரிமாறி கொண்டதுடன், தீபாவளி வாழ்த்துக்களை கூறி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.