தேசிய செய்திகள்

இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது - நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து

இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளதாக, நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்கவாழ் இந்தியர் அபிஜித் பானர்ஜி உள்பட 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த ஒரு செய்தி சேனல், அமெரிக்காவில் உள்ள அபிஜித் பானர்ஜியிடம் பேட்டி கண்டது. அப்போது, இந்திய பொருளாதாரம் குறித்து அவர் கூறியதாவது:-

இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருக்கிறது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி பார்த்தால், விரைவில் அது மீண்டு எழும் என்று உறுதியாக கூற முடியாது.

கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளில் சில வளர்ச்சியை கண்டோம். ஆனால், இப்போது அந்த உறுதிப்பாடும் போய்விட்டது.

எனக்கு இவ்வளவு சீக்கிரம் நோபல் பரிசு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக வறுமை ஒழிப்புக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை