தேசிய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து 168 பயணிகளுடன் புறப்பட்ட இந்திய விமானம்

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து இந்திய விமான படை விமானம் 107 இந்தியர்கள் உள்ளிட்ட 168 பயணிகளுடன் புறப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த நீண்டகால போர் முடிவுக்கு வந்து, தலீபான் பயங்கரவாதிகளின் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது.

இதனை முன்னிட்டு அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்களுடைய குடிமகன்களை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்டு 14ந்தேதி முதல் இதுவரை 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி அரிந்தம் பக்சி கூறும்போது, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து இந்திய விமான படை விமானம் 107 இந்தியர்கள் உள்ளிட்ட 168 பயணிகளுடன் புறப்பட்டு உள்ளது. அந்த விமானம் காபூலில் இருந்து டெல்லி வந்தடைகிறது என்று தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது