புதுடெல்லி,
குஜராத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் வெடி குண்டு தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை இன்று டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த அப்துல் சுபன் குரோஷி என்ற பயங்கரவாதியை டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு இன்று கைது செய்தது.
கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதி குரோஷி தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான சிமி யுடன் நெருங்கிய தொடர்புடன் இருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குஜராத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது இந்த அப்துல் சுபன் குரோஷி ஆவான். குஜராத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு, அகமதாபாத், சூரத் ஆகிய இடங்களில் என மொத்தம் 27 இடங்களில் வெடி குண்டு வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயம் அடைந்தனர். #Terrorists | #DelhiPolice