புதுடெல்லி,
இந்திய ரெயில்வே இதற்கு முன் எந்த பிப்ரவரி மாதத்திலும் இல்லாத அளவுக்கு கடந்த பிப்ரவரியில் அதிகளவு சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 3.55 சதவீத வளர்ச்சி ஆகும். ரெயில்வே தொடர்ந்து 30 மாதங்களாக அதிக சரக்குகளை ஏற்றிச்சென்று சாதனை புரிந்து வருகிறது.
2022-2023-ம் நிதியாண்டில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும் சரக்கு வணிகம் சிறப்பாக நடைபெறுவதற்கான ஒரு காரணம் ஆகும். கடந்த ஆண்டு பிப்ரவரியில் 2 ஆயிரத்து 966 பெட்டிகளில் ஆட்டோமொபைல் பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், 2022-2023-ம் நிதியாண்டு பிப்ரவரியில் 5 ஆயிரத்து 15 பெட்டிகளில் ஏற்றப்பட்டுள்ளன. இது 69 சதவீத வளர்ச்சி.
ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.