புதுடெல்லி,
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.07 ஆக உள்ளது. துருக்கியில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. நேற்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 69.62 ஆக இருந்தது.