தேசிய செய்திகள்

உறைபனியில் யோகா செய்த இந்திய ராணுவ வீரர்கள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவ வீரர்கள் கடுமையான உறைபனியை பொருட்படுத்தாமல் யோகா செய்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

சர்வதேச யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு லடாக் எல்லைப் பகுதியில் உறைபனியை பொருட்படுத்தாமல் இந்திய ராணுவ வீரர்கள் யோகா செய்தனர். லடாக் - தீபெத் எல்லையில் லடாக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் மைனஸ் டிகிரி குளிரையும் பொருட்படுத்தாமல் யோகா செய்தனர்.

இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறையினர், நாட்டின் மிக கடினமான சில நிலப்பரப்புகளில், சூரியநமஸ்காரம், பிராணயாமா மற்றும் தியானத்தை மிகுந்த ஒழுக்கத்துடனும் நிகழ்த்தும் படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்தியா-சீனா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள, பத்ரிநாத் அருகே வசுதாரா உறைபனியில் 14000 அடி உயரத்தில் யோகா செய்யும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் பணியாளர்களின் படங்கள் வெளியாகி உள்ளன.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்