Image Courtesy : @PIB_India  
தேசிய செய்திகள்

'காசிந்த்-2023' கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்திய ராணுவ வீரர்கள் கஜகஸ்தான் பயணம்

7-வது கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 120 வீரர்கள் கஜகஸ்தான் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியா-கஜகஸ்தான் இடையேயான கூட்டுப் பயிற்சி, 2016-ம் ஆண்டு 'பிரபால் டோஸ்டைக்' என்ற பெயரில் தொடங்கப்பட்டது. பின்னர் இது 'காசிந்த்' பயிற்சி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு விமானப்படைப் பிரிவையும் சேர்த்து இருவழிப் பயிற்சியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு 'காசிந்த்-2023' 7-வது கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 120 வீரர்கள் கஜகஸ்தான் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இந்த பயிற்சி கஜகஸ்தானில் வரும் 30-ந்தேதி(நாளை) தொடங்கி, நவம்பர் 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த கூட்டுப் பயிற்சியின் மூலம் இரு தரப்பினரும் பரந்த அளவிலான போர்த் திறன்களில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், படைப்பிரிவுகள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது