தேசிய செய்திகள்

உக்ரைன் போர்: துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் ‘டிஸ்சார்ஜ்’

உக்ரைன் போரில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இந்திய மாணவர் சிகிச்சை முடிந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ந்தேதி போரை தொடங்கிய ரஷிய படைகள் சில நாட்களிலேயே தலைநகர் கீவை சுற்றிவளைத்தன. இதை தொடர்ந்து கீவில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டது.

அப்படி கீவ் நகரில் இருந்து வெளியேற முயன்றபோது ஹர்ஜோத் சிங் என்கிற இந்திய மாணவர் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்ட அவர் டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தார். இதை தொடர்ந்து தன்னை இந்தியாவுக்கு பாதுகாப்பாக அழைத்தும் செல்லும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

அதன்படி கடந்த 7-ந்தேதி இந்திய விமானப்படை மூலம் டெல்லி அழைத்துவரப்பட்ட ஹர்ஜோத் சிங் அங்குள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு 3 வாரங்களுக்கும் மேலாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்து. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த தகவலை அவரது சகோதரர் பிரப்ஜோத் சிங் தெரிவித்தார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை