தேசிய செய்திகள்

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் எல்லையில் குவிப்பு

இந்திய–சீன எல்லையில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியசீன எல்லையில் சீனா தனது ராணுவத்தை பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை கருத்தில்கொண்டு, காஷ்மீர் மாநிலம் லே பகுதியில் உள்ள சீன எல்லையில் படைகளை குவிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தோதிபெத்திய எல்லை போலீஸ் என்ற போரில் நிபுணத்துவம் பெற்ற துணை ராணுவப்படையின் வடமேற்கு எல்லைப்புற பிரிவை லே பகுதிக்கு செல்லுமாறு கூறியுள்ளது.

இந்த பிரிவு வீரர்கள் தற்போது பஞ்சாப் மாநிலம் சண்டிகாரில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் 960 கி.மீ. பயணித்து லேவுக்கு செல்ல உள்ளனர். மார்ச் மாதத்துக்குள் அங்கு சென்றடைந்து, ஏப்ரல் 1ந்தேதி முதல் எல்லை பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு மத்திய அரசு உத்தரவிட்டு இருப்பதாக இந்த படையின் தலைமை இயக்குனர் தேஸ்வால் கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்