தேசிய செய்திகள்

உக்ரைனில் இருந்து வெளியேற முயன்றபோது சுடப்பட்ட இந்திய மாணவர் இன்று டெல்லிக்கு அழைத்துவரப்படுகிறார்

உக்ரைனில் இருந்து வெளியேற முயன்றபோது சுடப்பட்ட இந்திய மாணவர் இன்று டெல்லிக்கு அழைத்துவரப்படுகிறார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்தவர் ஹர்ஜோத் சிங். உக்ரைனில் படித்து வருகிறார். கடந்த 27-ந் தேதி, அவர் வேறு 2 இந்தியர்களுடன் காரில் உக்ரைனை விட்டு வெளியேற முயன்றார். அப்போது கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இதில், ஹர்ஜோத் சிங் குண்டு பாய்ந்து காயமடைந்தார். தலைநகர் கீவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், இந்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டத்தின்கீழ் ஹர்ஜோத் சிங் இன்று (திங்கட்கிழமை) மீட்கப்பட்டு, டெல்லிக்கு அழைத்து வரப்படுகிறார். இத்தகவலை இந்திய உலக கூட்டமைப்பு தலைவர் புனீத்சிங் சந்தோக் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது